தென்காசி மாவட்டம், பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும்வெற்றி வேட்பாளர் ஜான்பாண்டியன் தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கான தனது தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டார்.
தேவேந்திரகுல வேளாளர் மக்களின் நெடுங்கால கோரிக்கையான பட்டியல் வெளியேற்றத்தை உறுதிப்படுத்துவேன், தமிழகத்தில் மது கடைகளை மூடி, கள்ளுக்கடைகளை திறக்க தனிநபர் மசோதா கொண்டு வருவேன், ஐந்து மாவட்டங்கள் செழிப்படைய விவசாயிகள் நலன் கருதி செண்பகவல்லி அணை பிரச்சனைக்கு மத்திய அரசின் துணையோடு நிரந்தர தீர்வு காண்பேன், பண்டைய மாநிலம் கேரளாவில் இருந்து வரும் மருத்துவக் கழிவுகளை நம் எல்லை கிராமங்களில் கொண்டு வந்து நோய் கிருமிகளை பரப்புவதை கட்டுப்படுத்துவேன், தென்காசியிலிருந்து சட்டத்திற்கு புறம்பாக வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படும் கனிம வளங்களை தடுத்து நிறுத்துவேன் என வாக்குறுதி அளித்தார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் ராஜேஷ் ராஜா, விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் சரவணதுரை என்ற ராஜா, தென்காசி பாராளுமன்ற பொறுப்பாளர் மகாராஜன், இணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் ராமராஜா, மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன், அமமுக வடக்குமாவட்டச் செயலாளர் வினோத் ராமச்சந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் முருகையா பாண்டியன், பாமக தென்காசி வடக்குமாவட்ட செயலாளர் சீதாராமன், மத்திய மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, தமமுக மாநில துணை பொதுச்செயலாளர் சண்முக சுதாகர், வடக்கு மாவட்ட செயலாளர் இன்பராஜ், பாரதிய ஜனதா கட்சி ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் செந்தூர்பாண்டியன், துணைத் தலைவர் குமார், சங்கரன்கோவில் ஊடகப்பிரிவு நகர தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.