புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலில் அம்மா பூங்காவில் இன்று மதியம் 3 மணியளவில் தக்ஸ்னா ஸ்கராத்தே மற்றும் கடம்பம் பாசறை அமைப்பின் மூலம் கராத்தே தகுதி பட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
ஆவுடையார்கோவிலில் தக்ஸ்னா ஸ்காரத்தே என்ற அமைப்பின் சார்பில் கராத்தே சிலம்பம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் அமைப்பில் ஆண்டுதோறும் அப்பகுதியை சுற்றியுள்ள மாணவ மாணவியர்கள் 120க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வருகின்றனர். பயிற்சி பெற்று வரும் மாணவ மாணவியர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை தகுதி பட்டை வழங்கப்படுகிறது. வெள்ளை, மஞ்சள், பச்சை, ஊதா, காவி, கருப்பு ஆகிய நிறங்களில் தகுதியின் அடிப்படையில் தகுதி பட்டை வழங்கப்படுகிறது. 11வது ஆண்டாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு உலக சாம்பியன் புதுகை சாந்தி சவுந்தர்ராஜன் கலந்து கொண்டு கராத்தே வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பேசி தகுதி பட்டங்களையும் வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு மத்திய பாதுகாப்புத் துறையை சேர்ந்த மகா குரு பாலசுப்ரமணியம் கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களை உற்சாகப்படுத்தி பேசி பட்டயங்களையும் வழங்கினார். நிகழ்ச்சியை மாவட்ட தலைமை பயிற்சியாளர் சண்முகம், ஒன்றிய தலைமை பயிற்சியாளர் சரவணன், பயிற்சியாளர்கள் சோமசுந்தரம், ராஜப்பா, ரமேஷ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பின்னர் பயிற்சி பெற்ற மாணவ மாணவியர்கள் தலை, கை, கால் ஆகியவற்றால் ஓடுகளை உடைத்தும், சிலம்பம் பயிற்சிகளை செய்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இறுதியில் மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.