மன்னகுடி ஸ்ரீ அய்யனார் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் விழா

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மன்னகுடி  கிராமத்தில் பிரசித்தி பெற்ற பூர்ண புஷ்கலாம்பாள் சமேத ஸ்ரீ அய்யனார் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ முருகன் ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஸ்ரீ முன்னோடியான் சுவாமி திருக்கோயில்கள் அமைந்துள்ளது.

பிரசித்தி பெற்ற இக்கோயில் கும்பாபிஷேகம் செய்வதென அப்பகுதி கிராமத்தார்களால் முடிவு செய்யப்பட்டு கோவில் புணரமைப்பு பணிகள் முடிவுற்ற நிலையில் சிறப்பான யாகசாலை பூஜை அமைக்கப்பட்டு நேற்று கணபதி ஹோமத்துடன் முதற்காலையாக பூஜை தொடங்கியது விழாவின் முக்கிய நாளான இன்று இரண்டாம் கால யாக பூஜை நிறைவுற்று மேளதாளங்களுடன்  கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. கடம் புறப்பாடானது கோவிலை சுற்றி வளம் வந்த பின்னர் கோபுர கலசத்தை அடைந்தது. சுப்பிரமணியபுரம் பாலசுப்பிரமணிய குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேக நிகழ்ச்சியில் மன்னகுடி, சுப்பிரமணியபுரம், பிடாரிகாடு, அரசர்குளம், கொடிவயல், மங்களநாடு,  நாகுடி  உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களிலிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நாகுடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.