ஐசிஎஸ்இ 10, +2 தேர்வு முடிவுகள் வெளியானது : மீண்டும் சாதித்த மாணவிகள்

ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை எழுதிய மாணவர்களின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வழக்கம் போல் மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிஐஎஸ்சிஇ பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தேசியளவில் நடத்தப்படும் இந்த தேர்வுகளில் 2,750 க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தனர். கடந்த மார்ச் மாதம் இந்த தேர்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பின் ஐஎஸ்இ தேர்வு முடிவுகள் மற்றும் பத்தாம் வகுப்புக்கான ஐசிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

காலை 11 மணியளவில் cisec.org மற்றும் results.cisec.org என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த இணைய முகவரியில் தங்களது தகவல்களை உள்ளீடு செய்து மதிப்பெண்களை சரி பார்த்துக் கொள்ளலாம். கடந்த ஆண்டு 98.94 சதவீத மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்த முறை 99.47 சதவீத மாணவர்கள் இந்த தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவிகள் 99.21 சதவீதமும், மாணவர்கள் 98.71 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ம் வகுப்பு தேர்வில் மாணவிகள் 98.01 சதவீதமும், மாணவர்கள் 95 96 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.