ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டால் செருப்பால் அடியுங்கள் : அறிக்கை விட்ட காங்கிரஸ் தலைவர் சஸ்பெண்ட்

ஜெய்ஸ்ரீ ராம் முழக்கம் எழுப்புவர்களை போலீஸார், செருப்பால் அடிக்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்தைத் தெரிவித்த ராய்ச்சூர் காங்கிரஸ் தலைவர் பஷிருதீன் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம், ராய்ச்சூரின் காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தவர் பஷிருதீன். இவர் ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்புவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். அதாவது, ஜெய்ஸ்ரீ ராம் முழக்கமிடுபவர்களை போலீஸார் செருப்பால் அடிக்க வேண்டும் என்று அறிக்கை விட்டிருந்தார். இவரின் பேச்சுக்கு பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் தலைவர், இப்படி சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது நல்லதல்ல என்றும் புகார் கூறியிருந்தனர்.

இதையடுத்து ராய்ச்சூர் காங்கிரஸ் தலைவர் பஷிருதீனிடம் விசாரணை நடத்த காங்கிரஸ் தலைமையில் இருந்து தலைவர்கள் வந்திருந்தனர். அவர் பேசியது குறித்து விளக்கம் கேட்டப்பட்டது. இந்த நிலையில், ராய்ச்சூர் காங்கிரஸ் தலைவர் பஷிருதீனை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து ஒழுங்கு குழுத் தலைவர் கே. ரஹ்மான் கான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில், முக்கியமான விஷயங்களைப் பொதுவெளியில் பேசக்கூடாது என்று கேபிசிசி அறிவுறுத்திய நிலையில், தேர்தலின் போது கட்சியையும், தலைவர்களையும் சங்கடப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டீர்கள்.

இந்த அறிக்கை வெளிவந்தது 7 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து தலைவர் நீக்கப்பட்டுள்ளது ராய்ச்சூர் கட்சி அணியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.