வேலையில்லா திண்டாட்டம், கல்வி, மருத்துவ வசதி குறித்தெல்லாம் பிரதமர் மோடி பிரச்சாரத்தில் பேசுவதே இல்லை : தேஜஸ்வி யாதவ்

வேலையில்லா திண்டாட்டம், கல்வி, மருத்துவ வசதி குறித்தெல்லாம் பிரதமர் மோடி பிரச்சாரத்தில் பேசுவதே இல்லை என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சனம் செய்துள்ளார்.

பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டரில் செல்லும் வறுத்த மீன் சாப்பிடும் வீடியோவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், பின்னர் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆரஞ்சு பழ வீடியோவை வெளியிட்டுதொடர்ந்து பாஜக-வை சீண்டி வருகிறார்.

இந்நிலையில், வேலையில்லா திண்டாட்டம், கல்வி, மருத்துவ வசதி குறித்தெல்லாம் பிரதமர் மோடி பிரச்சாரத்தில் பேசுவதே இல்லை என்று தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியாதவது; பீகார் மாநிலத்தின் வளர்ச்சிக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகள் பற்றியே மோடி பேசுவதாகவும், பாஜவில் சேர்ந்தவர்கள் மீதான வழக்குகள் எல்லாம் மூடப்பட்டு விடுவதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் பீகாருக்கு என்ன செய்வேன் என்று மோடி கூறுவாரா என்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி கேள்வி எழுப்பியுள்ளார்.