ரோஸ் நிறுவனம் மற்றும் டி.டி.எச் நிறுவனம் இணைந்து நடத்திய உலக தண்ணீர் தின விழா

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் வட்டாரத்தில் “விலங்கொடிப்போம்”(Break the Chain Project) திட்டத்தின் இலக்கு கிராமங்களான கண்டாகுடிப்பட்டி, தெற்கு நல்லிப்பட்டி, அரிமளம் மயிலாடும்பாறை மற்றும் வையத்திதெரு, ஆயிங்குடி, குருந்தங்குடி மேனாம்பட்டி முடுக்குபட்டி ஆகிய கிராமங்களில் ரோஸ் நிறுவனம் மற்றும் டி.டி.எச் நிறுவனம் இணைந்து உலக தண்ணீர் தின விழா கொண்டாடப்பட்டது.

ஆயிங்குடி கிராமத்தில் நடைபெற்ற உலக தண்ணீர் தின விழாவில் தண்ணீரைப் பாதுகாத்தல் மற்றும் சேமிப்பதன் அவசியத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22-ஆம் தேதி தண்ணீர் தினமாக கொண்டாடப்படுகிறது. முக்கியமாக, நிலையான வளர்ச்சி இலக்கு 6-ன் இலக்குகளுக்கு ஏற்ப சுத்தமான நீர், சுகாதாரம் மற்றும் ஆகியவற்றுக்கான உலகளாவிய அளவில் கவனம் செலுத்தப்படுகிறது பற்றி ரோஸ் நிறுவன இயக்குநர் ஆதப்பன் தண்ணீரின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார்.

மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி இனிவரும் காலங்களில் தண்ணீரை வீணடிக்கமாட்டோம் எனவும், சிக்கனமாக செயல்படுத்துவோம் எனவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மரக்கன்றுகள் நடப்பட்டது. இவ்விழாவில் மகளிர் சுய உதவிக் குழுவினர், வளரிளம் பெண்கள், இளையோர் அமைப்பு, பள்ளிக் குழந்தைகள, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், ஆயிங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் ராஜமாணிக்கம் ரோஸ் நிறுவன பணியாளர் அகிலா சமுதாய ஒருங்கிணைப்பாளர்ள் விஜயா, கீதா குழந்தைகள் செயல்பாட்டு மைய ஆசிரியர்கள் சத்யா, பத்மினி, பெஸ்டின், கறுப்பாயி மற்றும் புஷ்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.