கந்தர்வகோட்டையில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அனைத்துவிவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் தலைவர் பி. ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார்.தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநில தலைவர் எல். பழனியப்பன், சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி. பத்மநாபன், மாவட்ட தலைவர் பி. மகேந்திரன், ஒருங்கிணைப்பாளர் ஜி. செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஆலோசனை கூட்டத்தில்பேசிய சங்கத்தின் தலைவர் பி. ஆர். பாண்டியன் காவிரியில் நமக்கான தண்ணீரை போராடி பெற்று வருகின்றோம் இந்த போராட்டம் என்பது விவசாயிகளின் ஒற்றுமையால் நடைபெற்று வருகின்றது, வருங்காலங்களில் தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரை முழுமையாக பெறுவதற்கு மேலும் போராடும் நிலை தான் உள்ளது என்றும் விவசாயிகளுக்கு தேவையான அரசு நலத்திட்டங்கள் மற்றும் வேளாண்மை துறையின் மானியங்களை பெறாத விவசாயிகளுக்காக சங்கத்தின் சார்பில் பல்வேறு முயற்சி எடுத்து வருவதாகவும் விவசாயிகளின் தேவைகளை அறிந்து சங்கத்தின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருவதாகவும் பேசினார்.

கூட்டத்தில் வளவை பெரியஅய்யா,எஸ். டேவிட், டி. சிவக்குமார், இளங்கோவன், ஜேசுராஜ், ராஜேஷ்குமார், ஜெயசீலன் உள்ளிட்ட சங்கத்தின் பல்வேறு பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.