அரியலூர் அருகே வள்ளலார் கல்வி நிலையத்தில் மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

வள்ளலார் கல்வி நிலையத்தில் மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

அரியலூர் அருகே உள்ள லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையம், அரசு உதவி பெறும் கே.ஆர்.வி. நடுநிலைப் பள்ளியில், அகர்வால் இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அகர்வால் கண் மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர்  கணபதி சுப்ரமணியன் பேசுகையில், மாணவர்கள் படிக்கும்போது வகுப்பறையில் நல்ல வெளிச்சம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும், குறைந்த வெளிச்சத்தில் படித்தால் கண்கள் பாதிக்கப்படலாம், கண்களுக்கு சரியான பயிற்சிகளை தினசரி செய்ய வேண்டும் என்றார்.

முகாமில் ஒளிவிழி பரிசோதகர் தீன தயாளன், ஸ்ரீதர், முகாம் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் ஆகியோர் மாணவர்களுக்கு கண் மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினார்கள். 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. அதில்  பாதிப்புக்குள்ளாகிய 30  மாணவ, மாணவிகள் மேல் சிகிச்சைக்காக திருச்சிக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். கண் சிகிச்சை முகாமில் பள்ளி  ஆசிரியர்கள் மற்றும்  பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர் என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் பெ.சவுந்தரராஜன் கூறினார்.