புதுக்கோட்டையில் பள்ளி குழந்தைகளுக்கு இடையூராக  இருந்த அரசு டாஸ்மாக் கடையை ஒருமாதத்திற்குள் அகற்றுவதாக அதிகாரிகள் உறுதி

பள்ளிக்குழந்தைகளுக்கு இடையூராக புதுக்கோட்டையில் இயங்கிவந்த அரசு டாஸ்மாக் கடையை ஒருமாதத்திற்குள் அகற்றுவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும். வடக்குராஜ வீதியில் உள்ள பழனியப்பா முக்கத்தில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது, இந்த வழியாகத்தான் அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனைக்கும், அரசு உயர் தொடக்கப்பள்ளி, டிஎல்சி மேல்நிலைப்பள்ளி, சம்ஸ்கிருத ஒரியண்டல் உள்ளிட்ட பள்ளிகள் உள்ளன. இங்கு உள்ள டாஸ்மாக் கடையால் அப்பகுதி வழியாக மருத்துவமனைக்கு செல்லும் கர்ப்பிணிகள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

மேலும், சட்டத்திற்குப் புறம்பாக நகராட்சி கட்டிடத்தில் உள்வாடகையில் இந்தக் கடை இயங்கி வருகிறது, இக்கடையை அகர்ற கோரியும், அதிகாரிகள் கடையை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து கடையை அகற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடையின் முன்பாக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு நகரச் செயலாளர் ஆர் சோலையப்பன் தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் எஸ்.கவிவர்மன் , செயற்குழு உறுப்பினர்கள் ஜி .நாகராஜன், துரை.நாராயணன், எஸ். ஜனார்தனன், மாவட்டக்கு உறுப்பினர்கள் டி.சலோமி, பி.சுசீலா, எஸ்.பாண்டிச்செல்வி, வி.காயத்ரி,  வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் அ.குமாரவேல், தலைவர் ஆர்.மகாதீர், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.கணேசன் மற்றும் நகரத் குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றான்.விஜயலெட்சுமி, டாஸ்மாக் மாவட்ட துணை மேலாளர் கருப்பையா, காவல் ஆய்வாளர் ஜபார் உள்ளிட்டோர் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் கடையை ஒரு மாதத்திற்குள் வேறு இடத்திற்கு அகற்றுவதாக உறுதியளித்தனர், இதனைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + = 16