கோட்டைமேடு அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அன்னவாசல் வட்டார வள மையத்திற்கு உட்பட்ட கோட்டைமேடு அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

பள்ளி ஆசிரியை ஜெமினிட் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜியோ ராஜாமணி முன்னிலை வகித்து நிகழ்வினை தொகுத்து வழங்கினார். பள்ளிக் குழந்தைகளின் நடனங்கள் பாடல்கள் என கலை நிகழ்ச்சிகள் கலை கட்டியது. நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர் செலின்,வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரோஸ்மேரி சகாயராணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். ஆசிரியர் பயிற்றுநர் வைரமுத்து, இயன்முறை மருத்துவர் கோவிந்தசாமி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கோயல் ஜெயராமன், பள்ளி மேலாண்மை தலைவர் கோகிலா போன்றோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

வட்டார கல்வி அலுவலர் செலின் பேசுகையில், கல்வியே மிகச் சிறந்த ஆயுதம் என்றும் வெள்ளத்தே போகாதது வெந்தனலில் வேகாதது வேந்தரால் கொள்ளத்தான் முடியாதது கொடுத்தாலும் நிறைவின்றி குறையாதது  கல்வி ஒன்றே ஆகும். கற்றவர்களுக்குத் தான் சென்ற இடமெல்லாம் சிறப்பு. எனவே மாணவச் செல்வங்களே படியுங்கள் நன்றாக படியுங்கள் என்றார். விழாவில் சிறப்பு பயிற்றுநர்கள்  பாஸ்கர சேதுபதி, சந்திரா, குழந்தைப் பாடகர் ராமலிங்கம், கண்ணன், சித்ரா, மற்றும் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக வேலம்மாள் ஆசிரியர் நன்றி உரையோடு விழா இனிதே நிறைவு பெற்றது.