கோபாலப்பட்டினம் நைனா முகமது படுகொலை வழக்கில்  சட்டம் தன் கடமையை செய்யவேண்டும் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி கோரிக்கை

கோபாலப்பட்டினம் நைனா முகமது படுகொலை வழக்கில்  திசை திருப்பும் முயற்சிகளுக்கு இடமளிக்காமல் சட்டம் தன் கடமையை செய்யவேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி மாநில தலைவர் தமிமுன் அன்சாரி கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில் படுகொலை செய்யப்பட்ட நைனா முகமது குடும்பத்தாரை மனிதநேய ஜனநாயக கட்சி மாநில தலைவர் தமிமுன் அன்சாரி சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது அவர் நைனா முகமது குடும்பத்தாருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கேட்கும்போது மனம் படபடக்கிறது, கண்கள் குளமாகிறது. அவருடைய குடும்பத்தாருக்கு அரசு நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும். நைனா முகமது கொலை வழக்கு எவ்வித குறுக்கீடுகளும் திசை திருப்பும் முயற்சிகளுக்கும் இடமளிக்காமல் சட்டம் தன் கடமையை செய்யவேண்டும் என்று கூறினார்.

இச்சந்திப்பின் போது மாநில துணை செயலாளர்கள் பேராவூரணி அப்துல் சலாம், கோட்டை ஹாரிஸ், மனிதஉரிமை பாதுகாப்பு அணி மாநில செயலாளர் முனைவர் முபாரக் அலி, மாவட்ட அவைத்தலைவர் அப்துல் ஹமீது, மாவட்ட பொருளாளர் அரசை சையது அபுதாஹிர், மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் ஹமீது, முகமது யாசின், மாவட்ட கலாச்சார பேரவை செயலாளர் நோக்கியா சாகுல், மாவட்ட அலுவல் செயலாளர் ரியாஸ் அஹமது உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்.