12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 23 ஆண்டுகளாக தொடர்ந்து 100 சதம் தேர்ச்சி பெற்று  சாதனை

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் வழக்கம்போல் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளார்கள்.  மாணவர்கள் 33, மாணவிகள் 30 மொத்தம்  தேர்வு எழுதிய 63 பேரும் வெற்றி பெற்றுள்ளார்கள்.

தர்ஷனா, ரிஷிகாஹரிணி, ஆனந்தநாயகி, ஹரிணிபிரியா, பசுமதி ஆகியோர் சிறப்பிடம் பெற்றுள்ளனர். ஆனந்தநாயகி, நர்மதா, ஜெயஸ்ரீ, அருணாச்சலம் ஆகியோர் கணினிஅறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். தர்ஷினி கணினிப்பயன்பாடு பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார். கே.கே.தர்ஷனா பொருளியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார். ரிஷிகாஹரிணி வணிகவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி, பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி, நிர்வாக இயக்குநர் நிவேதிதா மூர்த்தி, இயக்குநர் சுதர்சன், துணைமுதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் அபிராமசுந்தரி, கெளரி ஆசிரியர்கள்; கமல்ராஜ், துர்காதேவி, கோகிலா, சுகுணா, ராஜாமணி, ஜெயசுதா, சரவணபவா, சின்னையா, சத்தியராஜ், ஆறுமுகம், செல்வராஜ், ரவிக்குமார், பால்ராஜ், பாலமுருகன் மற்றும் மேலாளர் ராஜா, காசாவயல் கண்ணன், உதயகுமார், சரசு ஆகியோர் பாராட்டி இனிப்புகள் வழங்கினர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மதிப்பெண்களை மட்டுமல்ல மதிப்புமிக்க எண்ணங்களை வளர்க்கும் பள்ளி என பெற்றோர்கள் வெகுவாக பாராட்டினர்.