தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மேலகரத்தைச் சார்ந்த அஇஅதிமுக நிர்வாகி ச.டேனி அருள் சிங், முறையற்ற மதுபான கடை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
மேலும் தென்காசி நகர மையப்பகுதியில் புதிதாக கிரவுன் பார் என்ற பெயரில் மதுபான விடுதி துவங்கப்பட்டுள்ளது. மதுபான விடுதியானது தென்காசி நகரம் மேம்பாலம் அருகில் வடபகுதியில் சுமார் 50 அடி தூரத்தில் இ.சி. ஈஸ்வரன் பிள்ளை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும், எதிரில் மேற்கு பகுதி 50 அடி தூரத்தில் தமிழ்நாடு அரசின் தொழில் பயிற்சி நிலையமும், அருகே மாவட்ட மகளிர் குழந்தைகள் நல காவல் நிலையம், தெற்கில் சுமார் 75 அடி தூரத்தில் எம்.கே.வி.கே. மேல்நிலைப்பள்ளி, தென்காசி ரயில் நிலைய சந்திப்பு ஆகிய முக்கிய இடங்களுக்கு நடுவே அமையப்பட்டுள்ளது.
தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து மஞ்சம்மாள் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளும் பள்ளிக்குச் செல்லும் முக்கிய சாலை ஆகும் 10அடி தூரத்தில் தான் தென்காசியில் நெடுஞ்சாலை பாலமும் ரயில் நிலையத்தை கடந்து செல்ல சுரங்க பாதையும் அதிகப்படியாக மக்கள் வாழும் குடியிருப்புகளான பொதிகை நகர், உடையார் தெரு, விஸ்வகர்மா நகர், அப்துல் கலாம் நகர், மேரியம்மா காம்பவுண்ட், தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் குடோன் ஆகியவை அமையப் பெற்றுள்ளது.
இந்த மதுபான கடை திறந்தால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இளைய சமுதாயம் சீரழிவது மட்டுமல்லாது அவ்வழியாக பள்ளிக்குச் செல்லும் மாணவிகளுக்கும், தென்காசி ரயில் நிலையத்திலிருந்து வெளியூருக்கு செல்லும் பயணிகளுக்கும், நெடுஞ்சாலையில் விபத்துகளும், அருகில் வசித்து வரும் பொது மக்களுக்கும், மது அருந்துபவர்களால் கடுமையான நெருக்கடிகளும், விபத்துகளும் தொல்லைகளும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால் அரசு விதிமுறைகளை மீறி மதுபான பார் திறப்பதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் கவனத்திற்கு மனு அளிக்கப்பட்டது.