புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி +2 பொதுத் தேர்வில் சாதனை

நடந்து முடிந்த  +2 பொதுத் தேர்வில் (2023-2024) புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிபள்ளியில் தேர்வு எழுதிய 195 மாணவர்களும் 100% தேர்ச்சி பெற்று மாநில, மாவட்ட அளவில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்று தொடர்ந்து சாதனை படைத்துள்ளனர்.

12-ம் வகுப்பு மாணவர்கள் கவிதா  592, ஆதி ஜெகநாத் 591, அஸ்மிடா 590 மதிப்பெண்களை பெற்றுள்ளார். மேலும் 195 மாணவர்களில் பாடவாரியாக 100க்கு100 மதிப்பெண்கள் 28 மாணவர்கள் பெற்றுள்ளனர். 550 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள் 21 மற்றும் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள் 70. அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவமணிகளைப் பள்ளியின் தலைவர் தேனாள் சுப்ரமணியன், பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் அஸ்வினி நாச்சம்மை, முதல்வர் முனைவர் சிராஜூதீன், துணை முதல்வர் சுப்ரமணியன், ஆசிரியர்கள்  மற்றும் பெற்றோர்கள் வாழ்த்தினர். வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்; பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களை முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் வாழ்த்தினர்.