ஜவுளி துறையில் பவானி ஜமக்காளத்திற்கு உலக அளவில் புதிய அத்தியாயத்தை தமிழகத்தை சேர்ந்த இளம் மங்கை தொடங்கி இருக்கிறார். ஈரோடு மாவட்டம், பவானியில் தயாரிக்கப்படும் போர்வைகளுக்கும், விரிப்புகளுக்கும் புவியியல் சார்ந்த குறியீடாக 2005-06 ஆண்டுகளில் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது.
இந்நிலையில் National Institute of Fashion Technology (Fashion design school in Chennai, Tamil Nadu) இந்தியாவில் தமிழகம் புதுக்கோட்டையை சேர்ந்த படித்த 24 வயதான அமிர்தா அரசு தற்போது அமெரிக்காவில் நியூயார்க்கில் வசித்து வருகிறார். ஜவுளி மற்றும் கைத்தறியில் அதிக ஆர்வம் உள்ளவரான இவர். இந்தியாவில் தொன்மையான கைவினை பாரம்பரியங்களில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளார். அவரது முதன்மையான விருப்பங்களில் ஒன்றாக கைத்தறி பவானி ஜமக்காளங்கள் உள்ளது. நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பேஷன் டெக்னாலஜியில் படித்து பணிபுரிந்த காலத்தில் அதிக கவனமும் ஆர்வமும் செலுத்தி ஜவுளி கைத்தறி வடிவமைப்பில் தன்னை ஆழமாக ஈடுபடுத்திக் கொண்டார்.
மேலும் தனது எண்ணம் வடிவமைப்பது மட்டுமல்லாமல் பாரம்பரிய நுட்பங்களை கற்றுக்கொள்வது மற்றும் கைவினை பொருட்களின் அடிப்படையை புரிந்து அதை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன். அனுபவம் மிக்க கைத்தறி நெசவாளர்களுடன் இணைந்து பாரம்பரிய கைவினை பொருட்களின் பல புதுமைகளை புகுத்தி ஜமக்காளத்தில் உள்ள குறிப்பிட்ட சில வகை விரிப்புகளையும் அதன் நுட்பங்களையும் முதல் முறையில் நவீன முறையில் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு பயன்படுத்தும் வகையில் தனது தயாரிப்புகளை உருவாக்கி இருக்கும் அமிர்தா அரசு. பவானி ஜமக்காளத்தில் கையில்லா தாழ்நிலை மெத்தை, முக்காலிகள், தாழ்விருக்கை திண்டு மெத்தைகள், தரை மற்றும் அலங்கார விரிப்புகள், மடி கணினி உரைகள், பணப்பைகள், கைப்பைகள், கல்லூரி பின் பைகள், உணவு பைகள் போன்றவற்றின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அதை பவானி ஜமக்காளத்தில் உருவாக்கியுள்ளார்.
இந்த கைவினைப் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிப்பு வகைகளை உருவாக்குவது நெசவாளர்களுக்கும் கைவினைஞர்களுக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை நீண்ட காலமாக கொண்டு வர முடியும். இந்த பாரம்பரிய சலுகைகளுக்கு புதிய சந்தையை உருவாக்க முடியும். ஒரு சில நுட்பங்களையும் சாத்தியங்களையும் ஆராய்ந்த தனது திட்டத்தில், எதிர்காலத்தில் கொண்டு வரக்கூடிய ஜமக்காளத்தில் இன்னும் பல மாற்றங்கள் மற்றும் சாத்தியக்கூறுகளின் ஆரம்பம் மட்டுமே என்றும் நம்பும்
அமிர்தா நியூயார்க்கில் உள்ள பார்சன்ஸ் ஸ்கூல் ஆஃப் டிசைனில் பட்டமும் பெற்றுள்ளார், அங்கு அவர் தனது தாய்நாட்டில் கற்றுக்கொண்ட பாரம்பரிய ஜவுளி நுட்பங்களை தொடர்ந்து ஆராய்ந்து பயன்படுத்துகிறார். தனது கைவினைப்பொருளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அமிர்தா, ஜவுளிக் கலை, வடிவமைப்பு மற்றும் சமூகக் கற்பித்தல் ஆகியவற்றின் பல்வேறு வடிவங்களில் தீவிரமாக பங்கேற்கிறார். அவரது படைப்புகள் நியூயார்க் நகரம் முழுவதும் பல கண்காட்சிகளில் காட்சிப்படுத்தப்பட்டு, நியூயார்க் டெக்ஸ்டைல் மாதத்தில் இடம்பெற்றுள்ளது. அவரது கலை முயற்சிகள் அவரது மரபுகள், தாயகம் மற்றும் முக்கியமாக ஜவுளி தயாரிப்பு நுட்பங்களைப் பற்றி பேசுகின்றன.