சுதர்சன் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான டாப் கோடர்ஸ் போட்டி 2024

சுதர்சன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான டாப் கோடர்ஸ் போட்டியை “டாப் கோடர்ஸ் – 24” என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது .தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் குறியீட்டு முறை போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் மொத்தம் 200 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தேசிய தொழில்நுட்பக் கழகம்,திருச்சி,அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை வென்றனர்.  இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

 பரிசளிப்பு விழாவில் கல்லூரியின் கணினி அறிவியல் பொறியியல் துறைத் தலைவர் முனைவர் பா.சுஜாதா அனைவரையும் வரவேற்று  இந்நிகழ்ச்சியின் சிறப்பு மற்றும் முக்கியத்துவத்தைக் கூறி மாணவர்களை ஊக்குவித்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர். கு.ஸ்ரீநிவாஸன், தனது மேன்மைதங்கிய பேச்சால் மாணவர்களை உற்சாகப்படுத்தினார். மேலும், மற்ற கல்லூரிகளிலும் எதிர்காலத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் ஆர்வத்துடன் பங்கேற்கவும், பல்வேறு வாய்ப்புகளை ஆராயவும் அனைத்து மாணவர்களையும் ஊக்குவித்தார். பின்னர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசுத் தொகை மற்றும் கேடயத்தை  வழங்கி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.

பரிசு வென்ற மாணாக்கரை சுதர்சன் கல்வி நிறுவனத்தின் தாளாளர் ஸ்ரீ விஜய்குமார், செயலாளர் ஸ்ரீ அஜய்குமார்  மற்றும் ஆம்பிவெஞ்சர்ஸ்  தலைமை செயலதிகாரி  முனைவர் ப்ரதீப் குமார் பாராட்டினர். கல்லூரியின் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறைத் தலைவர் ஜான் ஜோசப் நன்றியுரையை முன்மொழிந்து, அனைத்து மாணவ, பங்கேற்பாளர்களையும், பின்னர் வரக்கூடிய நிகழ்வுகளில் இன்னும் தீவிரமாக பங்கேற்க ஊக்குவித்தார். தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது. இந்நிகழ்வானது வெறும் போட்டியாக மட்டுமல்லாமல் தங்களுடைய துறைச் சார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் உறுதுணையாக இருந்தது.