புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் உலக அளவிலான முதலாம் ஆண்டு இலக்கிய விருதுகளுக்குத் தேர்வான படைப்பாளிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் உலக அளவிலான முதலாம் ஆண்டு இலக்கிய விருதுகளுக்குத் தேர்வான படைப்பாளிகள் விவரம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பேக்கரி மஹராஜ் நிறுவனர் சீனு சின்னப்பா அவர்களின் மகன் அருண் சின்னப்பா வெளியிட்டார்.

பேக்கரி மகராஜ் நிறுவனர் அறமனச்செம்மல் மறைந்தும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் சீனு. சின்னப்பாவின் நினைவாக இலக்கிய விருதுகள் -2024ஐ புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம்  கீழ்க்கண்டவாறு அறிவித்திருந்தது;

இலக்கிய ப் புரவலர், உழைப்பின் மகத்துவத்தை உணர்த்திய உன்னதமானவர், அறமனச்செம்மல் சீனு. சின்னப்பா அவர்களின் நினைவாக ஆண்டுதோறும் தமிழில் வெளிவரும் மிகச்சிறந்த இலக்கிய நூல்களை ஊக்குவித்து விருது மற்றும் பரிசுத்தொகை ரூபாய் பத்தாயிரம்வழங்கி நூல்களையும், நூலாசிரியர்களையும் கொண்டாட எண்ணுகிறோம். அவ்வகையில் முதல் ஆண்டின் இந்த அறிவிப்பை வெளியிடுவதில் புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் பெருமை அடைகிறது.

பிரிவுகள்; மரபுக் கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை, சிறுகதை,நாவல், சிறார் இலக்கியம் கட்டுரை [சமூகம், அரசியல், வரலாறு) கட்டுரை (கலை, இலக்கியம்) தன்னம்பிக்கை நூல், சிறந்தசிற்றிதழ் ஆகும் எனவும்.

நூலாசிரியர், பதிப்பாளர்கள் கவனத்திற்கு; நூல்கள் 2023 வெளிவந்ததாக இருக்க வேண்டும். நூல்கள் முதல் பதிப்பாக இருக்க வேண்டும். நூல்களில் மூன்று பிரதிகள் அனுப்ப வேண்டும். நூல்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 12.4.2024. விருது முடிவுகள் வெளியிடும் நாள் ஏப்ரல் 22.4.2024 என்றும் விருது வழங்கும் விழா புதுக்கோட்டையில் ஏப்ரல் 30.4.2024 அன்று நடைபெறும். அறிவித்திருந்தது  என்று அறிவித்திருந்தது  அதன்படி  சுமார்  324  நூல்கள்  வந்திருந்தன  அதிலிருந்து  வெற்றியாளர்கள்  தற்பொழுது  தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். 

இது குறித்து  சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் உலக அளவிலான முதலாம் ஆண்டு இலக்கிய விருதுகளுக்குத் தேர்வான படைப்பாளிகள் விவரம்:

10 பிரிவுகள்

நாவல் – குளம்படி- எழுத்தாளர் வெற்றிச்செல்வன் இராசேந்திரன்

மரபுக்கவிதை- வேலுநாச்சியார் காவியம்- புதுகை வெற்றிவேலன்

ஹைக்கூ- பொட்டலம்- கவிஞர் நயினார்

கட்டுரை- தண்டனைக் களமாகும் பெண்ணுடல்- ஊடகவியலாளர் சுகிதா சாரங்கராஜ்

தன்னம்பிக்கை நூல்- ஆட்சித்தலைவிகள்- எழுத்தாளர் ஜி.வி. ரமேஷ்குமார்

சிறுகதை- கரியோடன்- எழுத்தாளர் சாரோன்

புதுக்கவிதை- என் பெயரெழுதிய அரிசி- எழுத்தாளர் கண்மணி ராசா

சிறுவர் இலக்கியம்- பாப்பாவுக்கு பறவைப்பாட்டு- எழுத்தாளர் சாந்தி சந்திரசேகர்

கட்டுரை- மறுவாசிப்பில் தமிழ் நாவல்கள்- எழுத்தாளர் ந. முருகேசபாண்டியன்

சிறந்த சிற்றிதழ்- புன்னகை- க. அம்சப்பிரியா, ச. ரமேஷ்குமார்

விருது வழங்கும் விழா வரும் ஏப்ரல் 30ஆம் தேதி மாலை 6 மணிக்கு புதுக்கோட்டையில் நடைபெறும்.

ஒவ்வொரு விருதும் பாராட்டுச் சான்றிதழ், தலா ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது. 10 பிரிவுகளுக்கு மொத்தம் ரூ. ஒரு லட்சம் ரொக்கப் பரிசு. விருது பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள். நூல்களைத் தேர்வு செய்துத் தந்த நடுவர் குழுவினருக்கும் வாழ்த்துகள், நன்றிகள்.

விருதுகள் பட்டியலை புதுக்கோட்டையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் சீனு சின்னப்பா அவர்களின் மகன் பேக்கரி மஹராஜ் உரிமையாளர் அருண் சின்னப்பா வெளியிட கவிஞர் நா. முத்துநிலவன் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி, செயலர் கவிஞர் மகா சுந்தர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.