புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்துள்ள வடகாட்டை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் அ.வெங்கடாசலம். இவரது மகள் தனலட்சுமி. சொந்த ஊர் வடகாடு என்றாலும் புதுக்கோட்டையில் வசித்து வருகிறார். நாளை மறுநாள் 19.4.2024 நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் இவர் சுயேட்சை வேட்பாளராக சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் விசில் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
பெரும்பாலும் பெண் சுயேட்சை வேட்பாளர்கள் என்பவர்கள் கிராம பஞ்சாயத்துகளில் வார்டு உறுப்பினர்கள் முதல் ஊராட்சி மன்றத் தலைவர் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள், தலைவர்கள் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் என்றுதான் தேர்தல் களம் காண்பது காண முடியும். சட்டமன்ற உறுப்பினர் தேர்தலுக்கு ஒருவேளை அவர்கள் கட்சியில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டால் போட்டியிட்டு இருக்கலாம். ஆனால் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பெரும்பாலும் சுயேட்சை வேட்பாளர்கள் ஆண்களாக தான் இருந்திருப்பார்கள். தனலட்சுமி பெண் வேட்பாளராக களம் காண்பது அரிதிலும் அரிதான செயலாகும்.
இந்த நிலையில் தான் அவர் சிவகங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கு சுயேட்சை வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்து அதுவும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு ஒவ்வொரு ஊராக சென்று வாக்கு சேகரிப்பும் முடித்து நேற்று மாலை ஆறு மணிக்கு தனது பரப்புரையை. தனது தந்தை வெங்கடாசலம் அடக்கம் செய்து நினைவிடம் கட்டியிருக்கும் நினைவிடத்தில் பிரச்சாரம் தொடங்கி அதே இடத்தில் நிறைவும் செய்தார். பெரும்பாலும் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரம் தொடங்கும் இடம் வழிபாட்டுத் தலமாகவோ அதிகம் கூட்டம் கூடும் கடைத்தெருக்கள் ஆகவோ இருப்பதை காண முடியும். நிறைவு செய்வதும் அப்படித்தான் முடிப்பார்கள். ஆனால் தனலட்சுமி தனது தந்தையின் நினைவிடத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி தொகுதி முழுவதும் கிராமங்கள் தோறும் கடந்த 20 நாட்களாக வாக்குகள் சேகரித்து தந்தை அடக்கம் செய்யப்பட்ட கல்லறை என்று சொல்லப்படும் நினைவிடத்திலேயே நிறைவு பிரச்சாரத்தையும் முடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.