கலகலப்பால் களத்தை வசமாக்கும் செல்லூர் ராஜூ : களைப்பை மறந்து களத்தில் நிற்கும் தொண்டர்கள்

அதிமுக வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்யவந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஷட்டில் காக் விளையாடிய சம்பவம் அதிமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. 

மதுரையில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் மருத்துவர் சரவணனுக்காக வரிந்து கட்டிக்கொண்டு வாக்குச் சேகரித்து வருகிறார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. ஒவ்வொரு நாளும் பிரச்சாரம் தொடங்கும் இடத்திற்கு சரியான நேரத்திற்கு அவர் வந்து விடுவார். அதன் பின்னர் தான் வேட்பாளரே வருவார். அவ்வளவு பர்ஃபெக்டாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் செல்லூர் ராஜூ. 

அதன்படி இன்று காலை மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இருந்து பிரச்சாரத்தைத் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.  சொன்னபடி காலை ஏழு மணிக்கு அங்கு வந்துவிட்ட  செல்லூர் ராஜூ, அங்கு ஷட்டில் காக் விளையாடிக் கொண்டிருந்தவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த தொண்டர்கள், “அண்ணே நீங்களும் விளையாடுங்க” என்று அவரை உசுப்பேற்றினர்.

”நமக்கெல்லாம் அது விளையாடத் தெரியாதுப்பா” என்று முதலில் மறுத்த செல்லூரார், தொண்டர்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று பின்னர் களத்தில் புகுந்தார். பின்னணியில், எம்ஜிஆரின் ‘நினைத்தேன் வந்தாய்…’ பாடல் மெலிதாக ஒலித்துக்கொண்டிருக்க அதற்கேற்றவாறு அசைந்தாடி  செல்லூர் ராஜூ இறகுப் பந்தை  எதிர்கொண்ட விதம் அனைவரையும் ரசிக்க வைத்தது. வேட்பாளர் சரவணன் வருகிற வரைக்கும் விளையாடிய செல்லூர் ராஜூ, அவர் வந்ததும் அவரையும் தன்பக்கம் சேர்த்துக்கொண்டு சிறிது நேரம் விளையாடினார்.

https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&client=ca-pub-9693451887247156&output=html&h=280&adk=3209511924&adf=3746312414&pi=t.aa~a.2710742366~i.1~rp.4&w=752&fwrn=4&fwrnh=100&lmt=1713254159&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=1941324037&ad_type=text_image&format=752×280&url=https%3A%2F%2Fkamadenu.hindutamil.in%2Fpolitics%2Fsellur-raju-played-badminton&fwr=0&pra=3&rh=188&rw=752&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTIzLjAuNjMxMi4xMjMiLG51bGwsMCxudWxsLCI2NCIsW1siR29vZ2xlIENocm9tZSIsIjEyMy4wLjYzMTIuMTIzIl0sWyJOb3Q6QS1CcmFuZCIsIjguMC4wLjAiXSxbIkNocm9taXVtIiwiMTIzLjAuNjMxMi4xMjMiXV0sMF0.&dt=1713254148110&bpp=1&bdt=957&idt=1&shv=r20240410&mjsv=m202404090201&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Da842eccc92d07727-22dcb04edce2008d%3AT%3D1690698009%3ART%3D1713254038%3AS%3DALNI_Mb1PAG1Xkk6tqjurdk5D5tFeMbm5Q&gpic=UID%3D00000c2555463488%3AT%3D1690698009%3ART%3D1713254038%3AS%3DALNI_Mawrh0Ob9WXJvSFgSMvQLTJuPo2AA&eo_id_str=ID%3D79ad44e5e6fa91da%3AT%3D1706611638%3ART%3D1713254038%3AS%3DAA-Afjaf8ALagGCJwShlf3QEE-b3&prev_fmts=0x0%2C752x280&nras=3&correlator=2040909684765&frm=20&pv=1&ga_vid=1633204430.1690697998&ga_sid=1713254148&ga_hid=128137361&ga_fc=1&u_tz=330&u_his=6&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=1&dmc=8&adx=105&ady=4031&biw=1349&bih=607&scr_x=0&scr_y=1606&eid=44759875%2C44759926%2C44759842%2C42531514%2C95329428%2C95329724%2C31082657%2C95321957%2C31082144%2C95321868%2C31078663%2C31078665%2C31078668%2C31078670&oid=2&psts=AOrYGsn7SogFK6s8MmmPEo6_jkwmQLOA8_O-xyhsHAw1owCDU4POtNHtj8pVqMiIedSoLe60sYr0_1v-83Wvrg&pvsid=2064396768133977&tmod=2040356799&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fkamadenu.hindutamil.in%2Fstate&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C607&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1&td=1&psd=W251bGwsbnVsbCxudWxsLDNd&nt=1&ifi=10&uci=a!a&btvi=2&fsb=1&dtd=11501 அதன் பின்னர் இருவரும் விளையாட்டை முடித்துக் கொண்டு அங்கிருந்தவர்களிடம் துண்டுப்பிரசுரம் கொடுத்து வாக்குச் சேகரித்தனர். இப்படி, செல்லும் இடம் எதுவாக இருந்தாலும் அதை தன்வசப்படுத்திவிடும் செல்லூராருடன் பிரச்சாரத்துக்குச் செல்லும் தொண்டர்கள் களைப்புத் தெரியாமல் களத்தில் நிற்கிறார்கள். ராஜூவின் இயல்பான பேச்சும் செயலும் தொண்டர்களையும் பொதுமக்களையும் ரசித்துச் சிரிக்க வைப்பதால் காசு கொடுக்காமலே கூட்டமும் கூடுகிறது.