மதுரை மாநகர் பகுதி பொன்மேனி பைபாஸ் ரோட்டில் புதிதாக அமைந்துள்ள “ஸ்ரீ சாய்” மருத்துவமனை திறப்பு விழா இனிதே நடைபெற்றது.
இவ்விழாவில், டாக்டர் மனோகர் ஸ்கேன், மதுரை சித்திரா மனோகர், அனைவரையும் இன்புற வரவேற்றனர். கோபி மனோகர், டாக்டர் சிந்துஜா கோபி, சி.எம்.சி. வெலூர் டாக்டர் மோகன் கார்த்திகேயன், சிவ சங்கரி டிப்ளமோ, சோனாலஜி ஸ்ரீ விக்னேஷ் சர்ஜரி ஸ்ரீ நிதி டாக்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக மருந்துவ துறையில் சிறந்து விளங்கும் டாக்டர்கள் தேவதாஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிறுவனர் தேவதாஸ், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ரத்னவேல், வடமலையான் குருப் ஆப் மருத்துவமனை நிறுவனர் டாக்டர். புகழகிரி வடமலையான், மதுரை சிவ ஜோதி மருத்துவமனை நிறுவனர் டாக்டர். மகாலிங்கம், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மெடிக்கல் கண்காணிப்பாளர் கணேசன் கலந்து கொண்டனர்.
இந்த மருத்துவமனையில் தரை தளம் அமைந்துள்ள வரவேற்புரை மற்றும் வார்டு களை டாக்டர் தேவதாஸ் திறந்து வைத்தார். இரண்டாம் தளம் வார்டுகளை டாக்டர் புகழகிரி வட மலையான் திறந்து வைத்தார். மருத்துவமனையில் நோயாளிகளுக்கான அனைத்து வசதிகளும், குளிர்சாதன அறைகளுடன் காணப்பட்டன. மேலும் இவ்விழாவில் டாக்டர்கள் தமது கடந்த கால நெறிமுறைகளையும், தனது திறமைகளையும் வெளிபடுத்தி சிறப்புரையாற்றினர். செவிலியர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு, திறப்பு விழா நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.