ரக்‌ஷாபந்தனுக்கு ஏழைப் பெண்களுக்கு ரூ.1 லட்சம் : ஆர்ஜேடி தேர்தல் அறிக்கையில் அசத்தல் வாக்குறுதி

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் இன்று வெளியிட்டார்.

மக்களவைத் தேர்தலில் பீகாரில் ஆர்ஜேடி இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. ஒரே கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும் பல்வேறு மாநிலங்களிலும் பிரதான கட்சிகள் தனித்தனியாக தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கு முக்கிய அம்சமாக கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகள் உள்ளன.

தேர்தல் அறிக்கைகள் எத்தகைய திருப்பத்தையும் ஏற்படுத்தும் சக்தி படைத்தவை என்பதால் அரசியல் களத்தில் இருப்பவர்கள் மட்டுமின்றி, சாதாரண மக்களும் தங்களுக்கு எந்தெந்த கட்சிகள், என்னென்ன வாக்குறுதிகள் அளித்துள்ளார்கள் என்பதை வைத்து வாக்குச் செலுத்தும் வழக்கம் உள்ளது.

இந்நிலையில் பீகாரில் பிரதான எதிர்க்கட்சியான ஆர்ஜேடி-யின் தேர்தல் அறிக்கையை அம்மாநில முன்னாள் துணை முதல்வரும், கட்சியின் முன்னணி தலைவருமான தேஜஸ்வி யாதவ் இன்று வெளியிட்டார்.

அதில், 24 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. கட்சியின் முன்னணி தலைவர்கள் மத்தியில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தேஜஸ்வி யாதவ் கூறுகையில், “பீகாரில் சிறந்த போக்குவரத்து இணைப்புக்காக, மாநிலத்தில் பூர்ணா, பாகல்பூர், முசாபர்பூர், கோபால்கஞ்ச் மற்றும் ரக்ஸால் ஆகிய 5 புதிய விமான நிலையங்கள் உருவாக்கப்படும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம். பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து பெற்றுத் தருவோம்.

https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&client=ca-pub-9693451887247156&output=html&h=280&adk=311073930&adf=98421822&pi=t.aa~a.4200144536~i.5~rp.4&w=752&fwrn=4&fwrnh=100&lmt=1712996100&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=1941324037&ad_type=text_image&format=752×280&url=https%3A%2F%2Fkamadenu.hindutamil.in%2Fpolitics%2Ftejashwi-yadav-releases-rjd-manifesto-promises-airports-in-5-bihar-cities&fwr=0&pra=3&rh=188&rw=752&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTIzLjAuNjMxMi4xMDciLG51bGwsMCxudWxsLCI2NCIsW1siR29vZ2xlIENocm9tZSIsIjEyMy4wLjYzMTIuMTA3Il0sWyJOb3Q6QS1CcmFuZCIsIjguMC4wLjAiXSxbIkNocm9taXVtIiwiMTIzLjAuNjMxMi4xMDciXV0sMF0.&dt=1712996083681&bpp=2&bdt=1388&idt=2&shv=r20240410&mjsv=m202404080101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Da842eccc92d07727-22dcb04edce2008d%3AT%3D1690698009%3ART%3D1712996132%3AS%3DALNI_Mb1PAG1Xkk6tqjurdk5D5tFeMbm5Q&gpic=UID%3D00000c2555463488%3AT%3D1690698009%3ART%3D1712996132%3AS%3DALNI_Mawrh0Ob9WXJvSFgSMvQLTJuPo2AA&eo_id_str=ID%3D79ad44e5e6fa91da%3AT%3D1706611638%3ART%3D1712996132%3AS%3DAA-Afjaf8ALagGCJwShlf3QEE-b3&prev_fmts=0x0%2C752x280&nras=3&correlator=684450261096&frm=20&pv=1&ga_vid=1633204430.1690697998&ga_sid=1712996083&ga_hid=1670695411&ga_fc=1&u_tz=330&u_his=22&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=1&dmc=8&adx=105&ady=3898&biw=1349&bih=607&scr_x=0&scr_y=1477&eid=44759876%2C44759927%2C44759837%2C95320377%2C31082143%2C95321868%2C31078663%2C31078665%2C31078668%2C31078670&oid=2&psts=AOrYGsnTrkGK0BZ090_hWQfvwot0CEmGIhz7puLKI_VkxvWWHPb5znXrUHKLFuoWLUfcfshZmyO7OQTwvMjJxg&pvsid=325952506503555&tmod=179243378&uas=3&nvt=1&ref=https%3A%2F%2Fkamadenu.hindutamil.in%2Fnational&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C607&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1&td=1&psd=W251bGwsbnVsbCxudWxsLDNd&nt=1&ifi=10&uci=a!a&btvi=2&fsb=1&dtd=16603 வரும் ஆகஸ்ட் 15-ம் தேதியிலிருந்து வேலையின்மை என்ற பிரச்சினையிலிருந்து மக்கள் சுதந்திரம் பெறுவார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் ஒரு கோடி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவோம். ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் வேலை வழங்க துவங்கிவிடுவோம்.

ரக்ஷாபந்தனை முன்னிட்டு ஏழை குடும்பங்களைச் சேர்ந்த எங்கள் சகோதரிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.1 லட்சம் வழங்குவோம். கேஸ் சிலிண்டர் ரூ.500-க்கு தருவோம்.” என்றார்.