சுதர்சன் பொறியியல் கல்லூரியில் மாபெரும் வளாக நேர்காணல் இன்று நடைபெற்றது. இதில் கோவை அக்வா நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் நேர்காணலை இரண்டு சுற்றுகளாக நடத்தி இறுதி ஆண்டு இயந்திரவியல் பொறியியல் துறையை சார்ந்த மாணவர்களைத் தேர்வு செய்தனர். இதில் மாணவர்களின் திறன் அறிவு பரிசோதனை நடத்தப்பட்டது. நேர்காணலை கல்லூரி முதல்வர் முனைவர் கு. ஸ்ரீநிவாஸன் அவர்கள் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியை துவக்கி வைத்து அவர் கூறுகையில் மாணவர்களின் திறனறிவும் இயந்திரவியல் திறன் மேம்பாடும் வேலை வாய்ப்பிற்கு எவ்வளவு முக்கியம் என்பதை அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியை கல்லூரியின் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் மற்றும் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறை தலைவர் சூ.ஜான் ஜோசப் ஏற்பாடு செய்திருந்தார். தேர்வு செய்யப்பட்ட மாணாக்கரை சுதர்சன் கல்வி நிறுவனத்தின் தாளாளர் ஸ்ரீ விஜய்குமார், செயலாளர் ஸ்ரீ அஜய்குமார் மற்றும் ஆம்பிவெஞ்சர்ஸ் தலைமை செயலதிகாரி முனைவர் ப்ரதீப் குமார் பாராட்டினர். இறுதியாக மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை கல்லூரி முதல்வர் முனைவர். கு. ஸ்ரீநிவாஸன் வழங்கினார்.