பொத்துகிட்டு  ஊத்திய  வானம்  திருமயம் பைரவர் கோவில் பயணத்தை ரத்து செய்த அமித்ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின்  திருமயம் பயணம்  மழையின் காரணமாக திடீரென  ரத்தானதால்  பாஜகவினர் மற்றும்  கூட்டணி கட்சியினர் அதிர்சியடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம்  திருமயம்  கோட்டையில் அமைந்திருக்கும்  கோட்டை பைரவர் கோவிலில்  உள்துறை அமைச்சர் அமித்ஷா  இன்று சாமி தரிசனம் செய்ய இருந்த  நிகழ்வு  கடைசி நேரத்தில் திடீரென ரத்தானது.

மத்திய உள்துறை அமைச்சராக இருப்பவர் அமித்ஷா  இவர் டெல்லியில் இருந்து விமானம் மூலமாக  மதுரை வந்தடைந்தார்  பின்னர்  மதுரையில் இருந்து  புதுக்கோட்டை மாவட்டம்  லேனவிளக்கில் இருக்கும்  செந்தூரன் கல்லூரி  ஹெலிகாப்டர் இறங்கும் தளத்தில்  இறங்கி  அங்கிருந்து  திருமயம் கோட்டை பைரவர் கோவிலுக்கு சென்று  சுவாமி தரிசனம் செய்வது  என்று திட்டமிடப்பட்டது. 

அதற்கு  ஏதுவாக  புதுக்கோட்டை,  சிவகங்கை,  மதுரை மாவட்ட  காவல்துறை  ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வந்தது  இந்த நிலையில்  யாரும் எதிர்பாராத விதமாக  திடீரென  திருமயம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்  மாலை நான்கு மணி அளவில்  கன மழை பெய்யத் தொடங்கியது  இதனால்  வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால்  அமிர்ஷாவின் பயணம்  நடக்குமா நடக்காதா  என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. 

இதனிடையே  சரியாக 5 1/4 மணி அளவில்  வானம் தொடர்ந்து மேகமூட்டமாக இருப்பதால்  ஹெலிகாப்டர் பரப்பதற்கு  சாத்திய கூறுகள் சரியாக இல்லாததால்  பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது  இதனையடுத்து  அத்தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இச்செய்தியை அறிந்த  பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர்  மத்தியில் பரபரப்பு நிலவியது. 

திருமயம் சட்டமன்ற தொகுதியானது  சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்குள் வருகின்றது  அத்தொகுதியில் தற்போதைய  எம்பி யாக இருக்கும் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் தான்   காங்கிரஸ் கட்சியின்  வேட்பாளராக  களத்தில் இருக்கின்றார்  அவரை எதிர்த்து  பாஜக சார்பில்  தேவநாதன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.