மைக் சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும்- சீமான்

நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில், பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் டிடிவி தினகரனுக்கு குக்கர், ஜி.கே.வாசனுக்கு சைக்கிள் சின்னம் கிடைத்தது. தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக செயல்படவில்லை.

சின்னத்தை இழந்தாலும் எண்ணத்தை இழந்து விடக்கூடாது; இதை விட சிறந்த சின்னம் இல்லை என்று முடிவு செய்து உள்ளோம். சீமானுக்குத்தான் ஓட்டு, சின்னத்துக்கு இல்லை. கரும்பு விவசாயி சின்னத்துக்காகக் கடைசி வரை போராடினோம். என் வாழ்நாளில் சமரசத்துக்கு இடமில்லை. சின்னத்தில்தான் விவசாயியா..? நான் நிஜத்திலேயே விவசாயிதான். நாதக வேட்பாளர்களை சுயேட்சையாக நிறுத்தி 40 தொகுதிக்கும், 40 சின்னம் கொடுக்க வேண்டும் என்பது அவர்களது முயற்சி
இவ்வளவு நெருக்கடிக்கு மத்தியிலும் களத்தில் நிற்பதற்கு காரணம் நீங்கள் என்னை கைவிட மாட்டீர்கள் என்று தான் என்று கூறினார். இதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை சீமான் வெளியிட்டார். தொடர்ந்து பேசிய அவர், மாற்றத்துக்கான எளிய மக்களின் புரட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.