மதுரை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு உற்சாக வரவேற்பு

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மதுரை நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டாக்டர் சரவணனுக்கு மதுரை விமான நிலையத்தில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவித்த நிலையில் மதுரை நாடாளுமன்ற வேட்பாளராக டாக்டர் சரவணன் தேர்வு செய்யப்பட்ட நிலையில் மருத்துவர் சரவணன் சென்னையில் அதிமுக தலைமைக் கழகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்று இன்று மாலை மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

அவருக்கு அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் தொண்டர்கள் மதுரை விமான நிலையத்தில் மாலை அணிவித்து வெண்கல வேல் வழங்கி சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.