புதுக்கோட்டையில் சிறப்பு கல்விக் கடன் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் ‘மாபெரும் சிறப்பு கல்விக் கடன் முகாமினை”மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா இன்று துவக்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன் உதவித்தொகைக்கான ஆணைகள் மற்றும் காசோலைகளை வழங்கினார். பின்னர் அவர் தெரிவித்ததாவது;

தமிழ்நாடு முதலமைச்சர; அவர;கள் மாணவ, மாணவிகள் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்கி நல்லதோர் எதிர்காலத்தினை அமைக்கும் வகையில் பல்வேறு கல்வி சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் இல்லம் தேடிக் கல்வி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், புதுமைப் பெண் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் மாணவ, மாணவிகளின் கல்வி ஆர்வத்தினை மென்மேலும் அதிகரித்து வருகிறார்கள். அதன்படி, இன்றையதினம் புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் ‘மாபெரும் சிறப்பு கல்விக் கடன் முகாம்” துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு கல்விக் கடன் முகாமில், மாவட்டத்திற்குள் கல்லூரி பயின்று கொண்டிருக்கும் மாணவ, மாணவியரும், புதுக்கோட்டை மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்டு மற்ற மாவட்டங்களில், மற்ற மாநிலங்களில் மற்றும் வெளிநாடுகளில் பயின்று கொண்டிருக்கும் மாணவ, மாணவியரும் கல்விக் கடன் பெற தகுதியுடையோர் ஆவர். மேலும் மாணவ, மாணவியர் கல்விக்கடனுக்கு புதிதாக விண்ணப்பிக்க மற்றும் இதர சான்றிதழ்களை பெற கல்லூரி வளாகத்திலேயே இ-சேவை மைய வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ரூ.18.69 கோடி மதிப்பீட்டில் வங்கிகளின் மூலம் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இம்முகாமில் கல்விக்கடனுக்கு விண்ணப்பித்த 128 மாணவ, மாணவிகளுக்கு ரூ.6.98 கோடி மதிப்பீட்டில்; பல்வேறு வங்கி கிளைகளின் மூலம் வழங்கப்பட உள்ளது. எனவே மாணவ, மாணவிகள் அனைவரும் இம்முகாமினை பயன்படுத்திக் கொண்டு வங்கிகளின் மூலம் கல்விக் கடன் பெற்று தங்களின் உயர் கல்வி பயிலும் கனவினை நனவாக்கிக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் செல்வம், கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் ஜெ.சுகந்தி, வட்டாட்சியர் பரணி, அனைத்து வங்கி மேலாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.