அறுபடை வீடுகளுள் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாகத் தொடங்கியது. கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருவிழா கொடியேற்றப்பட்டது. மாசித்திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கடலில் புனிதநீராடி சுவாமி தரிசனம் செய்தனர். 12-நாட்கள் நடைபெறும் திருவிழாவில் நாள்தோறும் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 20-ந் தேதி சிவப்பு சாத்தியும், 21-ந் தேதி பச்சை சாத்தியும் நடைபெறுகிறது. மாசித்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 23-ந் தேதியன்று நடைபெறுகிறது.