புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் ரிகாப் இந்தியா மற்றும் ஜோ ஆர்ட் அகாதெமி நடத்திய உலக சாதனை ஓவியப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளிலிருந்து 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். ஓவியம் வரைவதற்கு ‘பிளாஸ்டிக் இல்லாத இந்தியா’Plastic Free India என்ற தலைப்பு கொடுக்கப்பட்டது. எல்.கே.ஜி முதல் 12-ஆம் வகுப்பு வரையிலும் மற்றும் 17-வயதுக்கு மேற்பட்ட பிரிவினருக்கும் ஐந்து பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்தப்போட்டிகளை பள்ளியின் முதல்வர் தங்கம்மூர்த்தி வழிகாட்டுதலின் படி ரிகாப் இந்தியா டிரஸ்ட் தலைவர் சக்திவேல், மேலாளர் நந்தினி சக்திவேல், ஜோ ஆர்ட் அகாதெமி நிறுவனர் அருள் ஜோசப் ஆகியோர் தலைமையேற்று நடத்தினார்கள். ஓவியப் போட்டி நடுவர்களாக பெவி க்ரைல் ஆசிரியர்கள் ஷீலா, புவனேஸ்வரி, அருள் ஜோசப் பங்கேற்று மாணவர்களின் சிறந்த ஓவியங்களை தேர்வு செய்தனர். பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. ஓவியப் போட்டிகளை பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல், ஓவிய ஆசிரியர் சாந்தி மற்றும் உதயகுமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.