புதுக்கோட்டை பேக்கரி மஹராஜ் நிறுவனத்தின் தானியங்கி உணவுப்பொருள் வழங்கும் மெஷின் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஆர்வலர்களால் வைக்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்ட மக்களின் முழு நம்பிக்கையை பெற்ற நிறுவனமான அறமனச் செம்மல் தெய்வத்திரு சீனு சின்னப்பா அவர்களால் தொடங்கப்பட்ட பேக்கரி மஹராஜ் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் சாமானிய மக்களை எந்த நேரத்திலும் எளிதில் கிடைத்திடும் வகையில் ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான தானியங்கி இயந்திரம் ஒன்று கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக பேக்கரி மஹராஜ் நிறுவனத்தின் தலைமை அலுவலகமான மார்த்தாண்டபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
தங்களுக்கு உணவு கிடைக்காத சிக்கலான நேரத்தில் அந்த மிஷினை பொதுமக்களில் பலர் பயன்படுத்திக்கொண்டு தங்களின் தேவையை பூர்த்திசெய்துக்கொண்டு வருகின்றனர். மெஷின் வைத்த ஆரம்பத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு முறை மட்டுமே டாப் ஆப் செய்த நிறுவனம் தற்பொழுது இரவு நேரங்களில் இரண்டு, மூன்று முறை வரை டாப் ஆப் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த அளவிற்கு மெஷின் முக்கியத்துவம் பயன்பாடு பொதுமக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. இருப்பினும் இந்த மெஷின் பொதுமக்கள் அதிகம் சங்கமிக்க கூடிய இடங்களில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் சமீபகாலமாக சமூக ஆர்வலர்களால் வைக்கப்பட்டு வருகிறது அது நம்முடைய கள ஆய்விலும் தெரிய வந்துள்ளது.
அந்த வகையில் சாமானிய ஏழை எளியோர் அதிகம் கூட கூடிய புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இத்தகைய தானியங்கி இயந்திரம் அமைக்கப்பட்டால் பொதுமக்களுக்கும் ஏழை எளியோருக்கும் குறைந்த விலையில் தரமான உணவுப் பொருட்களான பிரட் பாக்கெட், பன்,ரஸ்க் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் நோயாளிகளுக்கு கிடைக்க ஏதுவாக அமையும் பொது மக்களின் எதிர்பார்ப்பு குறித்து புதுகை வரலாறு சார்பில் பேக்கரி மஹராஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அருண்ராஜ் சின்னப்பா அவர்களை சந்தித்து பொதுமக்களின் எதிர்பார்ப்பு குறித்து தெரிவித்த போது அவர் கூறுகையில்;
பொதுமக்கள் தங்களையும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் பொது மக்களின் தேவையை பூர்த்தி செய்ய தாங்கள் தயாராக இருப்பதாகவும் அதே வேளையில் மாவட்ட நிர்வாகம் விருப்பப்பட்டு எங்களுக்கு அனுமதி அளித்தால் ரூபாய் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான தானியங்கி இயந்திரத்தை எங்களின் சொந்த செலவில் அங்கு அமைத்து நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் அத்தியாவசிய தேவையான பொருட்களான பிரட்,பன்,ரஸ்க் பாக்கெட்களை வைத்து பராமரிக்க தாங்கள் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தனியாரால் நடத்தப்பட்டு வரும் கேண்டின்களில் விற்கப்படும் பொருள்களின் விலை கடைவீதிகளில் உள்ள விலையை விட கூடுதல் விலை வைத்து விற்கப்படுவதால் நோயாளிகள் மட்டுமின்றி அவர்களது உறவினர்களும் பசியும் பட்டினியுமாகவே பாதி நாட்களைக் கடக்க வேண்டிய சூழலில் உள்ளனர். இது மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திற்கும் நன்கு தெரியும் மக்களின் நலன் கருதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கையை கருத்தில் கொண்டு குறைந்த விலையில் உடனுக்குடன் தயாரிக்கப்படும் பேக்கரி மஹராஜ் நிறுவனத்தின் தயாரிப்புகளையோ அல்லது மாவட்ட நிர்வாகமே ஒரு தானியங்கி இயந்திரத்தை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்காக ஏற்பாடு செய்து அதில் தரமான உணவு பொருட்களை பொதுமக்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள், நோயாளிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது புதுகை வரலாறு எதிர்பார்ப்பு.