நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் நாட்டுக்கு எதிராக செயல்பட்டதை தொடர்ந்து கண்காணித்த பிறகே என்.ஐ.ஏ. சோதனை நடத்தப்பட்டது : எல்.முருகன் பேட்டி

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் நாட்டுக்கு எதிராக செயல்பட்டதை தொடர்ந்து கண்காணித்த பிறகே என்.ஐ.ஏ. சோதனை நடத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ. அவர்களை கைதுசெய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளது என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளான சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்டோர் வீடுகளில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தப்பட்டது. விடுதலை புலிகளுக்கான ஆயுதக்கடத்தல் தொடர்பான வழக்கில் சோதனை நடத்தப்பட்டதாக என்ஐஏ கூறிய நிலையில் எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 6 இடங்களில் என்.ஐ.ஏ. நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னனை, திருச்சி, கோவை, சிவகங்கை, தென்காசியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரமுகர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் சோதனையின்போது லேப்டாப், 8 சிம் கார்டுகள், 7 மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றனர். தடை செய்யப்பட்ட அமைப்பின் ஆதரவாளர்களாக செயல்பட்ட விவகாரத்தில் சோதனை நடத்தப்பட்டதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் நாட்டுக்கு எதிராக செயல்பட்டதை தொடர்ந்து கண்காணித்த பிறகே என்.ஐ.ஏ. சோதனை நடத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ. அவர்களை கைதுசெய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளது என்று எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார்.