வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை

தேராகால்புதூரில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை குழு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் பொதுமக்களின் கோரிக்கை மனு பெறப்பட்டது.

வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் சார்பாக சிவகிரி மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளர் எஸ்.எஸ்.செண்பக விநாயகம் கோரிக்கை மனு அளித்தார். அதில் கேரள மாநிலத்தில் வீணாக கலக்கும் செண்பகவல்லி அணையில் உடைந்த பகுதியை சரி செய்தால் தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்களும் தண்ணீர் பஞ்சம் நீங்கி செழிப்படையும், மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என அறிவித்த முத்தமிழ் அறிஞர் கலைஞரின் கனவை நினைவாக்க தென்காசியில் ஒரு மருத்துவக் கல்லூரி அமைய வேண்டும், 5 மாவட்ட விவசாயிகளின் கரும்பு பயிர் சாகுபடி செய்த நிலையில் தரணி சர்க்கரை ஆலையில் 99 கோடி நிலுவை பாக்கித் தொகையை பெற்று தர வேண்டியும், தரணி சர்க்கரை ஆலையை நம்பி 2000 தொழிலாளர்கள் வேலை இன்றி தவிக்கும் நிலையில் மூடி கிடக்கும் சர்க்கரை ஆலை தமிழக அரசே திறக்க வேண்டும்.

தென்காசி மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, தொழிற்சாலைகள் அமைத்து தர வேண்டியும், வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி விவசாய கூலி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும், மேல்படிப்பு படிக்கும் மாணவர்கள் பிற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டி இருப்பதால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்து தர வேண்டியும், சிவகிரி பேரூராட்சி பகுதியில் பொது நூலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதால் அரசு நிலத்தில் சொந்த கட்டிடம் கட்டித் தரவும், சிவகிரியில் தலைமை மருத்துவமனையில் அனைத்து வசதிகளுடன் தரம் உயர்த்தி காது, மூக்குத், தொண்டை, எலும்பு முறிவு, மகப்பேறு, குழந்தைகள் நல மருத்துவம், தீக்காய தீவிர சிகிச்சை பிரிவு போன்ற அனைத்து வசதிகளும் நிறைந்த மருத்துவமனை அமைத்து தர வேண்டியும், காட்டு யானை, காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதத்தை உடனடி நிவாரணம் வழங்க வேண்டியும், வனவிலங்குகளில் இருந்து காட்டுப்பன்றியை விலங்குகளின் பட்டியலில் இருந்து நீக்கிடவும், சோலார் மின் வேலி அமைத்து தர வேண்டியும், காட்டு விலங்குகளுக்கு பெரிய அகழிகள் அமைத்து கண்காணிப்பு கேமரா ஏற்படுத்தி கொடுக்க வேண்டியும், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குலாளர் மற்றும் பிற மக்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த நாட்டு செங்கல் சூழைகள் நடத்திட அரசு அனுமதி வழங்கிட வேண்டியும் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

இதில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே.ஜெயபாலன், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், டெல்லி தமிழக சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், அரசு தலைமை கொறடா கோவி.செழியன், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன், தென்காசி மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் மணிகண்டன், குற்றாலம் சுரேஷ், மாவட்ட பொருளாளர் ஷெரிப் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாநில மருத்துவ அணி துணை அமைப்பாளர் எஸ்.எஸ்.செண்பக விநாயகம், கனிமொழி கருணாநிதியிடம் பொது மக்களின் கோரிக்கை மனுவை வழங்கினார்.