புதுக்கோட்டையில் பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை கலெக்டர் மெர்சி ரம்யா துவக்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின்கீழ், பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர;வு பிரச்சார வாகனத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் பெண் குழந்தைகளின் நலனிற்காகவும், கல்விக்காகவும், பாதுகாப்பிற்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார;கள். அந்தவகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் எண்ணற்றத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றையதினம் பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவக்கி வைக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு வாகனமானது இன்று முதல் 22 -ஆம் தேதி வரை புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் சென்று பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் குறித்தும், அவர்களின் பாதுகாப்புகள் குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படவுள்ளது.

மேலும் இவ்வாகனத்தின் மூலம், மாவட்டத்தில் குழந்தை பாலின விகிதம் மற்றும் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்துதல். பாலின பாகுபாடு அடிப்படையில் குழந்தைகளின் பாலினம் அறிந்து கொல்லப்படுவதை தடுத்தல். பெண் குழந்தைகளின் பிறப்பினை உறுதி செய்து அவர்களின் கல்வி, திறன் மற்றும் பங்கேற்பினை உறுதிப்படுத்துதல். பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கையை அதிகப்படுத்துதல் மற்றும் தொடர்ந்து கல்வி பெறுவதை உறுதி செய்தல். வளரிளம் பருவத்தினருக்கான உட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் மாதவிடாய் பற்றிய கல்வியை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர;வுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பிரச்சாரம் செய்யப்படவுள்ளது.

எனவே தமிழக அரசின் மூலம் பெண் குழந்தைகளின் நலனிற்காக மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்றி பாதுகாப்பான சமூகத்தினை உருவாக்கிட வேண்டும் தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட சமூகநல அலுவலர் கோகுலப்பிரியா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார்  மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.