புதுக்கோட்டை சுதர்சன் பொறியியல் கல்லூரியில் கல்லூரி விழா கொண்டாட்டம்

புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுதர்சன் பொறியியல் கல்லூரியில் இன்று “PRASHASTI 2K24“ என்ற தலைப்பில் கல்லூரி விழாவானது வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வானது பாரம்பரிய முறைப்படி குத்து விளக்கு ஏற்றி, கல்லூரியின் முதல்வர் முனைவர்.கே ஸ்ரீனிவாசன் சிறப்பு விருந்தினர்கள், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகளை அனைவரையும் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினரை கல்லூரியின் செயலாளர் ஶ்ரீ கே அஜய்குமார் கௌரவித்தார். கல்லூரியின் தாளாளர் ஸ்ரீ கே விஜயகுமார் தலைமை உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து  விழாவின் சிறப்பு விருந்தினர் விஜய் டிவி புகழ் கலக்கப்போவது யாரு பாலா தனது தனிப்பட்ட காமெடி பேச்சால் அனைவரையும் கவர்ந்தார்.   மேலும் ஆன் ஸ்பாட் காமெடிகளின் மூலம் அனைவரின் கவனத்தையும் அள்ளி சென்றார். இந்நிகழ்வின் முடிவாக பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கி அவர்களை மேலும் ஊக்குவித்தார். தன்னைப்போல் மென்மேலும் எல்லோராலும்  வளர முடியும் விடாமுயற்சி ஒன்றை மட்டும் பற்றிக்கொண்டு உழைக்குமாறு  கேட்டுக் கொண்டார்.  நிகழ்வு முனைவர்.கே சித்ரா HoD/EEE அவர்கள் நன்றி உரை கூற தேசிய கீதத்துடன் இனிதே இவ்விழா நிறைவுபெற்றது.