நாகுடி அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் நவீன சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்ட துவக்க விழா

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே நாகுடி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 800-க்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்கள் நலன் கருதி அரியமரக்காடு கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்களான கண்ணாத்தாள் ரைஸ் மில் குடும்பத்தினர்கள் சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் சின்னம்மாள்  மாணவர்களுக்கு நவீன சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியக் குழுதலைவர் ஜெயசுதா பொன்.கணேசன், நெற்குப்பம் பரணி அகிலன், சிங்கப்பூர் தொழிலதிபர் விவேகானந்தன், நாகுடி அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமசாமி, துணை தலைவர் எம்.குணசேகரன் மற்றும் அரியமரக்காடு சந்திரன், சரவணன், பாண்டியராஜன், நாகுடி வர்த்தக சங்க தலைவர் புகழேந்தி, உதவும்கரங்கள் குழும தலைவர் செல்வமணி, பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன் மற்றும் ஆசிரியர்கள், நாகுடி சித்துதிருதரவுக்கரசு, ஆசிரியர் முத்துக்குமார், களக்குடி காசி.சுப்பிரமணியன், சண்முக கண்ணன் மற்றும் நாகுடி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராஜசேகரன், முருகானந்தம்,  பள்ளி மேலான்மை குழு தலைவர், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு சுமார் 2 லட்சம் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்த சமூக அலுவலருக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.