ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் 131-வது ஆண்டு விழா

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் 131 வது ஆண்டு விழா இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆவுடையார்கோவில் வட்டார கல்வி அலுவலர் புவனேஸ்வரி மலர்விழி தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் நரசிம்மன், திருப்பெருந்துறை ஊராட்சி மன்ற தலைவர் சந்திர ராஜமாணிக்கம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சிவகாமி, பெற்றோர் ஆசிரியர் கழகம் தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் லட்சுமி காந்தன் அனைவரையும் வரவேற்று பேசினார், ஆண்டறிக்கையை தமிழ் ஆசிரியர் பூங்கொடி  வாசித்தார், ஆவுடையார் கோவில் வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுனர் ஆரோக்கியராஜ், பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர் கணேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

விளையாட்டுப் போட்டிகளில் பரிசு பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. மாணவர்களுடைய திறமையை வெளிப்படுத்த கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. கலைத்திருவிழாவில் மாநில அளவில் களிமண் சுதை வேலை போட்டியில் மாநில அளவில் 2 ஆம் இடம் பெற்ற 8ஆம் வகுப்பு மாணவன் காரிமுத்துவிற்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயமும் பள்ளியின் சார்பாக வழங்கி சிறபித்தனர். நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.