கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: சயானை விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீஸ் சம்மன்

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடைய சயானை நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

கோடநாடு பங்களாவில் 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற கொள்ளை, கொலை வழக்கில் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 13-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, காவல் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த வழக்கில் கூடுதல் விசாரணை தேவையுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு விசாரணை ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயானை விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கோத்தகிரி அல்லது உதகை காவல் நிலையத்தில் நாளை (விசாரணை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.