தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப பேரவை மற்றும் புதுக்கோட்டை செந்தூரான் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து நடத்தும் “ஒரு நாள் மாநில அளவிலான மாணவர் திட்டக் கண்காட்சி”

தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப பேரவை மற்றும் புதுக்கோட்டை செந்தூரான் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் “ஒரு நாள் மாநில அளவிலான மாணவர் திட்டக் கண்காட்சி” நிகழ்ச்சி நடைபெற்றது.

இக்கண்காட்சியில் புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்திலிருந்து பல்வேறு பள்ளி மாணவ மாணவிகள் 150 பேருக்கு மேல் கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை கண்காட்சியில் இடம் பெறச் செய்தனர்.  இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளை கல்லூரியின் முதன்மை செயல் அதிகாரி முனைவர் ஏ.வி.எம்.எஸ்.கார்த்திக், மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஏணிப்படி போல் இருக்க வேண்டும் என்றும், அப்படியிருந்தால் தான் மாணவர்கள் தங்களுடைய திறமைகளை பயம் மற்றும் தயக்கம் இல்லாமல் வெளிக்கொணர முடியும் என்று வாழ்த்தினார். மேலும் கல்லூரியின் முதல்வர் முனைவர் கே.கணேஷ்பாபு பேசுகையில், மாணவர்களே உங்களுடைய திறமையைக் காட்டுவதும் மட்டும் அல்லாது அதைப்பற்றியும் தெளிவாகவும் விளக்க வேண்டும். இந்த உலகிற்கு அதனால் மற்றவர்களுக்கு என்ன பயன் உண்டு என்பதையும் எடுத்துக் காட்டவேண்டும். அதற்கேற்றாற் போல் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று பேசினார்.

இக்காண்காட்சியில் சிறப்பு விருந்தினராக திட்ட முன்னனி HUBS ஒருங்கிணைப்பாளர் பி.உமா சங்கரன், ஒரு தொழில் முனைவோர் புதுமையான கருத்துக்களை வெளிக்கொணர்வது தொடக்கம் Start-up என்பதற்கு தொன்றுதொட்டு செயல்படும் தொழில் முயற்சிகள், தொழிற்சாலையின் அடிப்படையாகும் என்றும், உங்களுடைய கனவு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் அதற்கு மாணவர்களாகிய நீங்கள் தினம் தோறும் சின்ன சின்ன முயற்சிகள் செய்து கொண்டேயிருந்தால் தான் வெற்றி அடைய முடியும். மாணவர்களே நீங்கள் தன்னம்பிக்கையோடு நேரத்தை செலவழிக்க வேண்டும். நேரம், தண்ணீர், உணவு ஆகிய மூன்றையும் அளவோடு கடைபிடிக்க வேண்டும் அது நமக்கும் சரி நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் சரி நன்மை பயக்கும் என்றும் கூறினார். 

விழாவில் விருந்தினராக தி கிரண்ட் எக்ஸ்பிரஸின் நிறுவனர் பூஜா தேவி, கலந்து கொண்டு பேசுகையில், அடுத்த ஐந்து வருடத்தில் ஆயிரம் தொழில் முனைவோர்களை உருவாக்குவேன் என்றும், அதில் ஆண்களுக்கு சமமாக பெண்கள் அதிகமாக தொழில் முனைவோர்களாக வரவேண்டும் என்றும் வாழத்துக் கூறினார்.

விழாவிற்கு கல்லூரியின் தலைவர் ஏ.வி.எம்.செல்வராஜ் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஆர்.வயிரவன், துணைத் தலைவர் சோம.நடராஜன், தாளாளர் ஏ.வி.எம்.ராமையா, செயலர் டி.தியாகராஜன், நிர்வாக இயக்குநர் முனைவர் எம்.பாண்டிகிருஷ்ணன், செயல் இயக்குநர் டி.கணேசன், துணைச் செயலர் ஆர்.அம்பிகாபதி, மனிதவள இயக்குநர் ஆர்.மீனாவயிரவன், மனிதவள-திட்டமிடல் எஸ்.யோகநாதன், பொருளாளர் டாக்டர். எம்.செந்தில் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கலந்துக் கொண்டு சிறப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வகுப்பு வாரியாக பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரியின் இயந்திரவியல் துறைப் பேராசிரியர் முனைவர் எம்.மெய்ஞானமூர்த்தி செய்திருந்தார்.