புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத்தின் 2-ம் ஆண்டு விழா

புதுக்கோட்டை அருகே கைக்குறிச்சி ஸ்ரீபாரதி மகளிர் கல்லூரியில் புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத்தின் 2-ம் ஆண்டு விழா நேற்று முன்தினம் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரித் தலைவர் குரு.தனசேகரன் தலைமை வகித்தார். சங்கத்தின் தலைவர் தங்கம் மூர்த்திக்கு பாரதி விருது என்று விருது, ரூ.10 ஆயிரம் பொற்கிழி ஆகியவற்றை வழங்கி எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் பேசியது : மாணவர்களுக்கு கல்வி, கலை, இயக்கியம் இருக்க வேண்டுமே தவிர, சினிமா அவசியமில்லை. அதேபோல, அனைவருக்கும் கதாநாயகர்களாக இருக்க வேண்டியவர்கள் சினிமாக்காரர்கள் அல்லர். கவிஞர், தேசபக்தர், நல்லாசிரியர், சிறுகதை ஆசிரியர் மட்டுமின்றி நல்ல மொழிபெயர்ப்பாளராக பாரதியார் திகழ்ந்தார். விதவை திருமணத்தைப் பற்றி பேசிய முதல் கவிஞரும் அவரே என்றார். விழாவில், தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் மகாசுந்தர், பொருளாளர் மு.கருப்பையா துணைச்செயலாளர் பீர்முகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.