புதுக்கோட்டையில் தொழில் முனைவோர்களுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் தமிழக அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டம், சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில், தொழில் முனைவோர்களுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம்,                 சட்டத்துறை          அமைச்சர் எஸ்.ரகுபதி, தொழில்துறை அமைச்சர் டாக்டர்.டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா, முன்னிலையில் இன்று (08.11.2024) நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் தொழில் முனைவோர்களை ஊக்குவித்திடும் வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடும் வகையில், குறை தீர்க்கும்  முகாம்கள் நடத்துதல், தொழில் நிறுவனங்களை மேம்படுத்துதல், நிறுவனங்கள் அமைப்பதற்கான இடவசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம், தொழில் முனைவோர;களுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், 25 தொழில் முனைவோர்கள் பங்கு பெற்றனர். இந்த வளாகத்தில் 101 நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு,  தற்போது 70 நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. மீதமுள்ள நிறுவனங்களும் செயல்படும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில், இந்நிறுவனங்களுக்கு தேவையான, மின்வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கைகளின் மீது உரிய பரிசீலனை செய்து, அதனை நிறைவேற்றிட தொடர்புடைய  அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள் மரு.வை.முத்துராஜா (புதுக்கோட்டை), சின்னத்துரை (கந்தர்வக்கோட்டை), முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், துணை மேயர் லியாகத் அலி, பொது மேலாளர் (சிப்காட்) வீரபத்திரன், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் தவ.பாஞ்சாலன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (குளத்தூர்) கவிச்சுடர் திரு.இராசு.கவிதைப்பித்தன், திட்ட அலுவலர் சுரீஜ்பாபு மற்றும் வீரமணி, எம்.எம்.பாலு, தொழில் முனைவோர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.