68வது தேசிய அளவிலான குத்துசண்டை போட்டிக்கு புதுக்கோட்டை மாவட்டம் இராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
தமிழக அரசு பள்ளி கல்வித்துறை மற்றும் இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துசண்டைக்கான தெரிவு போட்டி நவம்பர் 2 முதல் 4-ஆம் தேதி வரை விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் 19- வயதுக்கு உட்பட்ட மாணவியர்களுக்கான குத்துசண்டைப் போட்டியில் 45 கிலோவிற்கு உட்பட்டோருக்கான எடை பிரிவில் வெ.யஸ்வினி பத்தாம் வகுப்பு மாணவி மற்றும் 66-கிலோ எடைப்பிரிவில் மா.சாசனா பணிரெண்டாம் வகுப்பு மாணவி ஆகிய இரண்டு மாணவிகளும் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்கள். 68-வது தேசிய அளவிலான குத்துசண்டைப் போட்டி வரும் டிசம்பர் மாதம் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் இம்மாணவிகள் தமிழக அணி சார்பில் கலந்து கொள்ள உள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி செயலர், தலைமை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர், அலுவலர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.