தமிழ்நாடு அனைத்து பதிவு பெற்ற மருந்தாளுநர்கள் நலச்சங்கத்தின் சார்பில் உலக மருந்தாளுநர்கள் தினவிழா கொண்டாட்டம்

புதுக்கோட்டையில் உலக மருந்தாளுனர்கள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அனைத்து பதிவு பெற்ற மருந்தாளுனர்கள் நலச்சங்கத்தின் சார்பாக புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லுரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜ்மோகன் முன்னிலையில், கந்தர்வக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் சின்னத்துரை  தலைமையில் மரக் கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இதில் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் மருந்தாளுநர்கள் கலந்து கொண்டனர். பின்னர் தனியார் ஹோட்டலில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்வில் சங்கத்தின் மாநில தலைவர் கார்த்திக், மாநில செயலாளர் கிருஷ்ண குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை மருந்தகங்களில் மருந்தாளுநர்கள் மட்டுமே பணியில் இருக்க வேண்டும். அவர்களுக்கான சீருடை மற்றும் பதிவு செய்யப்பட்ட அடையாள அட்டை, அணிந்து இருக்க வேண்டும். மருந்து கடைகளில் யார் வேண்டுமானாலும் மருந்து எடுத்துக் கொடுக்கலாம் என்கிற நிலையை சரி செய்ய சட்ட மன்றத்தில் கோரிக்கை வைப்பேன் என்று கூறினார். மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜ்மோகன், சட்ட உரிமைகள் நுகர்வோர் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் ஜெகன், மாநில துணைத் தலைவர் பேரா.ஸ்ரீதரன், பேரா.ஞானசந்திரன், கலைவாணி, மாநில பொருளாளரர் ராஜகணபதி, மற்றும் மருந்தாளுநர்கள், அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.