புதுக்கோட்டை மாவட்ட இளையோர் தடகளப் போட்டிகளில் 800க்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் கடந்த செப்டம்பர் 6 மற்றும் 7 ஆகிய இரு தினங்களில் மவுன்ட் சீயோன் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் டெக்னாலஜியின் 7வது புதுக்கோட்டை மாவட்ட இளையோர் தடகளப் போட்டிகள் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் சண்முகம் மற்றும் டாக்டர். ஜெய்சன் ஜெயபாரதன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட தடகள சங்க செயலாளர் செந்தில் கணேசன் வரவேற்புரை வழங்கினார். சங்க கௌரவத் தலைவர் டாக்டர் கே.ஹெச்.சலீம் தலைமை தாங்கினார். இவர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராஜ் , பொருளாளர் பாலாஜி, சங்க உறுப்பினர் கந்தசாமி மற்றும் துணைச் செயலாளர் காளிதாசன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த இளையோர் தடகள போட்டியில் 800க்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
நிறைவு விழாவில் தடகள சங்கத்தின் துணைத் தலைவர் மற்றும் ஸ்ரீ பாரதி கல்லூரியின் தாளாளர் லியோ பெலிக்ஸ் லூயிஸ் , ட்ரீம் காலேஜ் தாளாளர் முருகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.