பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தலைமையாசிரியர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
குற்றாலத்தில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழக மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் தங்கமணி தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் எழிலரசன், அமைப்பு செயலாளர் திம்மராயன், செய்தி தொடர்பாளர் தாமரைச்செல்வன், தனியார் பள்ளி செயலாளர் வரதராஜன், பொருளாளர் ஆனந்தராமன், மாநில சட்ட செயலாளர் சீனிவாசன், மகளிரணி செயலாளர் தனலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்ட தலைவர் ராமசாமி வரவேற்றார்.
கூட்டத்தில் அரசு பள்ளிகளில் உடனடியாக அடிப்படை பணியாளர்கள் நியமிக்க வேண்டும். பழைய ஓய்யூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் செயல் தலைவர் சுப்பிரமணியன், கவுரவ தலைவர் ராதாகிருஷ்ணன், சிறப்பு தலைவர் பொன்முடி, மேளால் தலைவர் ரமேஷ், முன்னாள் சட்ட செயலாளர் கணபதி உட்பட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட செயலாளர் தமிழ்வாணி நன்றி கூறினார்.