அரியலூரில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தேசியக்கொடி ஏற்றி நலத்திட்ட உதவி வழங்கினார்

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 78வது சுதந்திர திருநாளை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி  தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு,
பல்வேறு துறைகளின் சார்பில் 104 பயனாளிகளுக்கு,  5,71,86,894 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக பணியாற்றிய 45 காவலர்கள், 179 அரசு அலுவலர்கள் மற்றும் செஞ்சிலுவை  சங்க நிர்வாகி சஹானா காமராஜ் உள்ளிட்டோருக்கு,  பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். விழாவில், பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) சுவாமி முத்தழகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், வருவாய் கோட்டாட்சியர்கள், துணை ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுகாதாரத்துறை, கல்வித்துறை, வளர்ச்சித்துறை, காவல்துறை உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள், பயனாளிகள் கலந்துகொண்டனர்.