புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சுதந்திர தினவிழா

புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர்   கே.எச்.சலீம் தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்றார். அவசர மற்றும் தீவிர சிகிச்சை மருத்துவர் கோகுல் பிரசாத் தேசிய கொடியேற்றி, சுதந்திரம் பெற்ற இந்த பொன்னாளில் தியாகத்தையும், தேச ஒற்றுமையும், மத நல்லிணக்கத்தையும் காத்திடுவோம் என்று சிறப்புரை ஆற்றினார். விழாவில் மருத்துவமனையின் இருக்கை மருத்துவர் பொன் புவனேஸ்வரன், செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.