கே.கரிசல்குளம் கிராமத்தில் புதிய தார் சாலை அமைக்கும் பணி துவக்கம்

சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி  குருவிகுளம் தெற்கு ஒன்றியத்திக்கு  உட்பட்ட கே.கரிசல்குளம் கிராம மக்களின் நீண்டகால கோரிக்கையான கழுகுமலை முதல் கே.கரிசல்குளம் வரையிலான தார்ச்சாலையினை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கையினை ஏற்று ராஜா எம்எல்ஏ உரிய அதிகாரிகளிடம் பேசி நிதி ஒதுக்கீடு பெற்று ரூ 3.5 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுத்தார். நிலையில் இந்நிலையில் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு குருவிகுளம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கடற்கரை தலைமை வகித்தார். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். இதில் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், கே.கரிசல்குளம் ஊராட்சி மன்ற தலைவர் மைனர்பாண்டி,  சங்கிலிப்பாண்டியன், ஜெயப்பிரகாஷ், நாராயணன், களப்பாளங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர், மாவட்ட பிரதிநிதி ராஜகுலராமர் பாண்டியன், ஒன்றிய குழு உறுப்பினர் முத்துலட்சுமி, கண்ணன், மாவட்ட வழக்கறிஞரணி துனை அமைப்பாளர் பிரபாகரன், மாவட்ட விவசாய அணி தலைவர் சேர்மன் பாலசுப்பிரமணியன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாரி ராஜ், ஒன்றிய மாணவரணி செந்தில்நாதன், தகவல் தொழில்நுட்ப அணி வீமராஜ், களப்பாளங்குளம் மூர்த்தி, ரெங்கசமுத்திரம் பாபு, அரசு ஒப்பந்ததாரர்கள் தவிடன், மரியலூயிஸ் பாண்டியன், மதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜாராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.