ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானியும் சான்றிதழ்கள் வழங்கும் விழா

எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்ட சான்றிதழ்கள் வழங்கும் விழா எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது.

நிகழ்விற்கு எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் தலைமை வகித்தார். அவர் பேசுகையில் ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டத்தில் இதுவரை 6 பள்ளிகளில் இருந்து 180 மாணவர்கள் பங்கேற்றார்கள். 6 வது பள்ளியாக புதுக்கோட்டை அரசு ராணியார் உயர் நிலைப்பள்ளியிலிருந்து 30 மாணவிகள் 15 நாட்கள் பயிற்சி பெற்றார்கள். அறிவியல் மனப்பான்மை மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றார்.

புதுகை வரலாறு நாளிதழ் நிறுவனரும் புதுக்கோட்டை கிரவுன் சிட்டி ரோட்டரி சங்க தலைவருமான சு.சிவசக்திவேல் மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி  திட்டம் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டம், அரசு பள்ளி மாணவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. 15 நாட்கள் மாணவிகள் மத்தியில் இத்திட்டத்தின் மூலம் எவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பதை மாணவிகள் அனுபவ பகிர்விவலிருந்து தெரிந்து கொள்ள முடிகின்றது. அறிவியல் விழிப்புணர்வையும் புதிய சிந்தனையையும் அறிவுப்பூர்வமாக கேள்வி கேட்கும் மனப்பான்மையையும் மேம்படுத்துவதில் இத்திட்டம் முக்கிய  பங்கு வகின்றது. இத்திட்டத்தை நவீன தகவல் தொழில் நுட்ப வசதிகளுடன் செயல் படுத்தி வரும் எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வாசகர் பேரவையின் செயலாளர் எஸ்.விஸ்வநாதன், இராணியார் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கே.கெஜலெட்சுமி, லண்டன் பள்ளி தாளாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மாணவிகளை வாழ்த்திப்பேசினர். மாணவிகள் ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டத்தின் மூலம் கற்றுக்கொண்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். கள ஒருங்கிணைப்பாளர் டி.விமலா அனைவரையும் வரவேற்றார். விஞ்ஞானி ப.மணிகண்டன் நன்றி கூறினார்.