புதுக்கோட்டை புது தெருவில் அமையப்பெற்றுள்ள வரத வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் பாலாலயம்  நடைபெற்றது

புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் அருகில் புது தெருவில் இந்து சமய அறநிலையத்துறையைச் சார்ந்த  வரத வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் பாலாலயம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதனை  முன்னிட்டு சிறப்பு ஹோமம், பல்வேறு சிறப்பு பூஜைகள், ஆஞ்சநேயருக்கு அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார்களால் ஆலயத்தில் பாலாலயம்  வைபவம் சிறப்புடன் நடைபெற்றது. புதுக்கோட்டை உதவி ஆணையர் தி.அனிதா, தேவஸ்தான செயல் அலுவலர் ச.முத்துராமன், ஆய்வாளர் வி. திவ்யபாரதி, கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம், அயற்பணி செயல் அலுவலர் சி.கவிதா, சமூக ஆர்வலர், குழந்தைகள் மருத்துவர் ராமதாஸ், மருத்துவர் ராமமூர்த்தி, ஆலய மேற்பார்வையாளர் தெட்சணமூர்த்தி, இளநிலைபொறியாளர் பாலசுப்பிரமணியன், ஆலய அர்சகர் சுதாகர் லெட்சுமணன், ஆலய நிர்வாகிகள் மற்றும் புதுக்கோட்டை அனுமன் திருச்சபை நிர்வாகிகள் ஆனந்த், சிற்பி கண்ணன், சிற்பி குமரி ஆனந்தன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.