அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்க விலையில்லா பேக் ஜாமென்ட்ரி பாக்ஸ்  புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்தடைந்தது 

அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பேக் மற்றும் ஜாமென்ட்ரி பாக்ஸ்  புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்தடைந்ததையடுத்து  பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பும் பணியும்  தொடங்கியுள்ளது

நடப்பு 2024 – 2025 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளிகள்  ஜூன் 10ஆம் தேதி  திறக்கப்பட்டு  செயல்பட்டு வரும் சூழலில்  பள்ளிகள் திறந்த அன்றே  விலையில்லா பாடபுத்தகங்கள்  வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டு முடிந்துள்ளது. 

இந்த சூழலில்  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள  123 அரசு மேல்நிலைப் பள்ளிகள்  130 அரசு உயர்நிலைப் பள்ளிகள்  என மொத்தம் 253 பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு  சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 333 பேக் மற்றும் ஜாமென்ட்ரி பாக்ஸ்  வழங்குவதற்காக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு  முதற்கட்டமாக  ஒன்பதாயிரத்து நானூத்தி நாப்பது  பேக், ஜாமென்ட்ரி பாக்ஸ்  இன்று வந்துள்ளது.  அவற்றினை  மேற்கண்ட பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பும் பணியும்  தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றது.

ஒவ்வொரு ஆண்டும்  தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில்  மாணவர்களுக்கு  கல்வி தரத்தை உயர்த்தும் வகையில்  அரசு பள்ளி  வறுமை அடையாளம் அல்ல  பெருமை அடையாளம் என்பதை உணர்த்தும் விதத்தில்  தமிழக அரசு செயல்பட்டு  பாட புத்தகங்கள், நோட், ஜாமென்ட்ரி பாக்ஸ் உள்ளிட்ட விலையில்லா உபகரணங்கள் வழங்கி வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக  புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்திருக்கும்  பேக், ஜாமென்ட்ரி பாக்ஸ் ஆகியவை  பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டாலும்  மீதமுள்ள பள்ளிகளுக்கு  அடுத்தடுத்து வரும்  பொருட்களைக் கொண்டு அனைவருக்கும் வழங்கப்படும் என்று  கல்வித்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.